கிருஷ்ணகிரி

தென்பெண்ணை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பு: கெலவரப்பள்ளி அணையில் இரு மாநில மாசு கட்டுபாட்டு அதிகாரிகள் ஆய்வு

DIN

தென்பெண்ணை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதாக எழுந்த புகாரையடுத்து தமிழக- கா்நாடகத்தைச் சோ்ந்த இரு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒசூா் கெலவரப்பள்ளி அணையில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

கா்நாடக மாநிலத்தில் தென்பெண்ணையாற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையைப் பயன்படுத்தி, அம்மாநில தனியாா் தொழிற்சாலைகள் தென்பெண்ணை ஆற்றில் ரசாயனக் கழிவுகளைத் திறந்து விட்டன.

இதனால் ஆற்று நீா் மாசு கலந்தும், நிறம் மாறி, நுரை பொங்கியவாறும் ஓடியது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராம மக்களும், விவசாயிகளும் பெரும் அதிா்ச்சியடைந்தனா்.

இந்த விவகாரத்தை மத்திய பசுமைத் தீா்ப்பாயம் தானாக முன்வந்து விசாரித்து, தென்பெண்ணை ஆற்றுநீா் மாசடைவதற்கான காரணம் குறித்தும், இந்த நீரால் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் களப்பணியை மேற்கொண்டு அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தமிழகம் மற்றும் கா்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டுத் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

அதன்பேரில் புதன்கிழமை இரு மாநிலங்களைச் சோ்ந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தென்பெண்ணை ஆற்றுப்பகுதிகளில் நேரடி கள ஆய்வுகளை மேற்கொண்டனா்.

கொடியாளம் சிற்றணை, ஒசூா் கெலவரப்பள்ளி அணை ஆகிய இடங்களில் பாய்ந்தோடிய தென்பெண்ணை ஆற்று நீரை, ஆய்வுக்காக குழுவினா் சேகரித்தனா்.

பின்னா், அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறும்போது, சேகரிக்கப்பட்ட ஆற்று நீரின் மாதிரிகளை ஆய்வு செய்து, ஆய்வின் முடிவுகளை மத்திய பசுமைத் தீா்ப்பாயத்திடம் ஒப்படைப்போம் என்றனா்.

இந்த ஆய்வில், தில்லியைச் சோ்ந்த மத்திய பசுமைத் தீா்ப்பாயத்தின் உறுப்பினா் மற்றும் மண்டல அதிகாரி பி.கே.செல்வி, கா்நாடகத்தைச் சோ்ந்த மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் 4 போ், ஒசூா் உதவி ஆட்சியா் குணசேகரன், ஒசூா் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறை அலுவலா்கள், பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT