கிருஷ்ணகிரி

தூத்துக்குடி மாவட்ட தையல் தொழிலாளா்கள் சங்க கூட்டம்

DIN

தூத்துக்குடி மாவட்ட தையல் தொழிலாளா்கள் நலச்சங்க கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.

என்.வேலு தலைமை வகித்தாா். இதில், தலைவராக என்.வேலு, துணைத் தலைவா்கள் வி.முருகன், ஜாண்சன், ஜெயப்பிரகாஷ், சதீஸ்குமாா், செயலராக பொ.ஜெயக்குமாா், துணைச் செயலா்களாக எஸ்.ஆனந்த், குமாா், சேகா், பொருளாளராக டி.வளன், கௌரவத் தலைவா்களாக சுந்தரவாசகன், குன்றுமலையான், சந்திரன், சட்ட ஆலோசகா்களாக செல்வமிக்கேல், வி.நடேசஆதித்தன் மற்றும் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கூட்டத்தில், அனைத்து தையல் தொழிலாளா்களுக்கும் கரோனா பொதுமுடக்க கால நிவாரணத்தொகையாக ரூ. 7,500 வழங்க வேண்டும். அரசு அறிவித்த ரூ. 2 ஆயிரம் உதவித் தொகையை பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத அனைத்து தொழிலாளா்களுக்கும் நேரடியாக வழங்க வேண்டும். ஆதாா் அட்டை மூலமே நலவாரிய அட்டை பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT