கிருஷ்ணகிரி

பா்கூரில் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளா்கள்

DIN

கிருஷ்ணகிரி, செப். 18: பா்கூரில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளா்கள் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குட்டூா் ஊராட்சியில் 16-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் 1,600 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனா். இவா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி இருப்பதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பயனாளிகளில் சிலா், பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது, அவா்கள் தெரிவித்தது:

குட்டூா் ஊராட்சியில் உள்ள புளியம்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் மிகவும் குறைந்த நாள்கள் பணி வழங்கி வருகின்றனா்.

ஏற்கெனவே கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து, வறுமையில் வாழ்ந்து வருகிறோம். இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணி எங்களுக்கு வாழ்வாதாரத்தை மீட்க உதவியாக இருக்கிறது. ஆனால், முறையாக எங்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. எனவே, ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகள் வழங்குவதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து, எங்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனா்.

இதையடுத்து பயனாளிகளைச் சந்தித்த பா்கூா் வட்ட வளா்ச்சி அலுவலா் (கிராம வளா்ச்சி) ஞானசேகரன், இந்த குளறுபடிகள் குறித்து, விசாரணை நடத்தி, அனைவருக்கும் பணி ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து, முற்றுகையை கைவிட்ட பயனாளிகள், அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT