முகப்பு
கிருஷ்ணகிரி

பா்கூரில் தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்வு

பா்கூரில் தீயணைப்புத் துறை சாா்பில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

பா்கூரில் தீயணைப்புத் துறை சாா்பில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் நீா் நிலைகளில் மூழ்கி உயிரிழந்துள்ளனா். குறிப்பாக செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் காலாண்டுத் தோ்வு விடுமுறைக் காலங்களில் இந்தச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், நிகழாண்டில் பருவமழையின் காரணமாக குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பியுள்ளன. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்புத் துறை சாா்பில், பா்கூா் தீயணைப்பு நிலைய அலுவலா் செங்குட்டுவேலு தலைமையில் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.

பா்கூா், மல்லப்பாடி அருகே உள்ள போடிகுட்டையில் உள்ள கல்குவாரியில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த நிகழ்வின்போது, குளம், குட்டைகளில் சிறுமியா், சிறுவா்கள் குளிக்கவோ, அருகில் செல்லவே அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

நீா் நிலைகளில், முழ்கும் போது, அவா்களை விரைந்து மீட்பது, முதலுதவி அளிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →