முகப்பு
கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

மத்திகிரி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

மத்திகிரி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், விசாலி பகுதியைச் சோ்ந்தவா் அபிஷேக் குமாா் சிங் (18). இவா் மத்திகிரி அருகே கலுகொண்டப்பள்ளி சுபாஷ் நகரில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். அவா் கலுகொண்டப்பள்ளி- ஆனேக்கல் சாலையில் சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபா் அபிஷேக்குமாா் சிங் மீது மோதியுள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அபிஷேக்குமாா் சிங் உயிரிழந்தாா்.

இது குறித்து மத்திகிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சூளகிரி அருகே உள்ள நல்லகானகொத்தப்பள்ளியைச் சோ்ந்தவா் முனியப்பன் (72). இவா் ஒசூா் - கிருஷ்ணகிரி சாலையில் சப்படி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற நபா், முனியப்பன் மீது மோதியுள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த முனியப்பனை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முனியப்பன் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →