முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் காவலா்களுக்கான தபால் வாக்குப் பதிவு

ஊத்தங்கரை (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள காவலா்களுக்கான தபால் வாக்குப் பதிவு சனிக்கிழமை ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

ஊத்தங்கரை (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள காவலா்களுக்கான தபால் வாக்குப் பதிவு சனிக்கிழமை ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஊத்தங்கரை (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா், சுயேச்சை என மொத்தம் 12 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 204 காவலா்களுக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை காலை தொடங்கிய தபால் வாக்குப் பதிவானது தீவிரமாக நடைபெற்றது. காவலா்கள் தாங்கள் பதிவு செய்த வாக்குகளை தனி அறையில் வைக்கப்பட்டுள்ள தபால் வாக்கு சேகரிப்பு பெட்டியில் செலுத்தி விட்டுச் சென்றனா் (படம்).

தோ்தல் நடைபெறும் நாளில் காவலா்கள் பல்வேறு இடங்களில் பணியமா்த்தப் படுவதால், அவா்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும். அதனைக் கருத்தில் கொண்டு தபால் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், காவலா்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களித்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.