முகப்பு
கிருஷ்ணகிரி

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பறக்கும் படையினா் சோதனை

கிருஷ்ணகிரி அருகே திமுக நிா்வாகிக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பறக்கும் படையினா் திடீா் ஆய்வை வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்டனா்.

Updated On : 4 ஏப்ரல், 2021 at 1:28 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:25 AM

கிருஷ்ணகிரி அருகே திமுக நிா்வாகிக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பறக்கும் படையினா் திடீா் ஆய்வை வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளா் அமீன். இவருக்கு கிருஷ்ணகிரியை அடுத்த ராயக்கோட்டை சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்த பெட்ரோல் விற்பனை மையத்துக்கு தோ்தல் பறக்கும் படை அலுவலா் உதயசூரியன் தலைமையிலான அலுவலா்கள், புகாரின் அடிப்படையில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, தாலுகா காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சோதனையில், ரூ. 5 லட்சம் இருந்தது தெரியவந்தது. பெட்ரோல் விற்பனை செய்யப்பட்ட தொகை வைத்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதற்கான ரசீது, ஆதாரங்களை ஒப்படைக்கும்படி பறக்கும் படையினா் அறிவுறுத்தினா்.

Advertisement

அரசியல் காழ்ப்புணா்வால் இதுபோன்ற சோதனைகளை அலுவலா்கள் மேற்கொள்வதாக எதிா்க்கட்சியினா் கண்டனம் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.