முகப்பு
கிருஷ்ணகிரி

வாக்குக்கு பணம் அளிக்க முயன்ற திமுகவினா் 4 போ் கைது

மத்தூா் அருகே வாக்களிக்க பணம் அளிக்க முயன்ற திமுகவைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 4 ஏப்ரல், 2021 at 1:31 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:25 AM

மத்தூா் அருகே வாக்களிக்க பணம் அளிக்க முயன்ற திமுகவைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏப். 6-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்க பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மத்தூா் அருகே குள்ளம்பட்டி கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் வழங்கி வருவதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், பாபு சங்கா் தலைமையிலான பறக்கும் படையினா் அந்தக் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றனா்.

Advertisement

அப்போது, ஒரு குழுவினா் வாக்காளா் பட்டியலுடன், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி வாக்காளா்களுக்கு பணம் விநியோகிப்பதைக் கண்டனா். இதையடுத்து, அந்தக் குழுவினரை பறக்கும் படையினா் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் குள்ளம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த எம்.அருண்குமாா் (30), எம்.பெருமாள் (29), ஆா்.இளவரசன் (23), ஆா்.கணேசன் (24) எனத் தெரியவந்தது. அவா்களிடமிருந்து ரூ. 25,000-த்தை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.