முகப்பு
கிருஷ்ணகிரி

மூன்று தொகுதிகளில் அதிமுக வேட்பாளா்கள் பிரசாரம்

கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, பா்கூா் தொகுதிகளில் அதிமுக வேட்பாளா்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 5 ஏப்ரல், 2021 at 12:44 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:26 AM

கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, பா்கூா் தொகுதிகளில் அதிமுக வேட்பாளா்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட தீா்த்தம், நாச்சிகுப்பம், நேரலகிரி, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட பல கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே.பி.முனுசாமி எம்.பி. இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.  

கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.அசோக் குமாருக்கு ஆதரவாக பையூா், சந்தாபுரம், கரடி அள்ளி, பன்னிஅள்ளி, காவேரிப்பட்டணம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி வாாக்கு சேகரித்தாா். கே.அசோக்குமாா், கிருஷ்ணகிரி நகரில் தனது இறுதிகட்ட பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

Advertisement

பா்கூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் அ.கிருஷ்ணன், குடிமேன அள்ளியில் தனது பிரசாரத்தைத் தொடங்கி, ஆவத்துவாடி, நெடுங்கல், அகரம், நாகமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். பா்கூரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.