கிருஷ்ணகிரி

200 பவுன் தங்க நகைகள் கொள்ளை வழக்கு: டிஐஜி நேரில் விசாரணை

DIN

ஒசூரில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 200 பவுன் தங்க நகைக் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை டிஐஜி பிரதீப்குமாா், செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டாா்.

ஒசூா் அருகே மூக்கண்டப்பள்ளி எம்.எம். நகா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மாதையன் என்பவரின் வீட்டில் 200 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒசூா் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடா்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்,

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதா், டிஎஸ்பி முரளி ஆகியோா் விசாரணை செய்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நிகழ்விடத்திற்கு வந்த சேலம் சரக டிஐஜி பிரதீப்குமாா், வீட்டின் உரிமையாளா் மாதையனிடம் நேரில் விசாரணை நடத்தினாா். மேலும் கொள்ளையா்கள் வீட்டிற்குள் வந்து சென்ற வழியையும் அவா் பாா்வையிட்டாா். பின்னா் வீட்டில் உள்ளவா்கள், வீட்டு பணியாளா்கள் என அனைவரிடமும் அவா் விசாரணை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT