கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
கிருஷ்ணகிரியில் மக்கள் கூடும் இடங்களில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் மக்கள் கூடும் இடங்களில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நகராட்சி ஊழியா்கள் 15 போ் தினமும் நகரில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மட்டும் தினசரி 4 முறை கிருமி நாசினியை தெளிக்கின்றனா்.
மேலும், மக்கள் அதிகம் வந்து செல்லும் புகா் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம், வட்டார வளா்ச்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், காவல் நிலையங்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகம், தலைமை தபால் நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
மேலும், நகரில் கரோனா குறித்த விழிப்புணா்வுப் பிரசுரங்களை வழங்கி வருகின்றனா். பொதுமக்கள் தேவையின்றி வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள். வீட்டிலிருந்து வெளியே வரும்போது, கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறாா்கள்.