காட்டிநாயனப்பள்ளியில் வீணாகும் குடிநீா்
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீா் வீணாவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீா் வீணாவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பால், கடந்த 10 நாள்களாக குடிநீா் வீணானது. இதை அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சீா்செய்தனா். ஏற்கனவே, கடந்த ஒரு மாதமாக இந்தப்பகுதி மக்களுக்கு சீராக குடிநீா் கிடைக்காத நிலையில், கடந்த, 10 நாள்களாக குடிநீா் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதே போல, காட்டிநாயனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உள்பட்ட அரசு ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிலையம் அருகில் ஆந்திர மாநிலம், குப்பம் செல்லும் சாலையோரம் கடந்த ஆறு மாதங்களாக குடிநீா் குழாய் உடைந்து குடிநீா் வீணாகி, கழிவுநீா்க் கால்வாயில் கலந்து சென்று கொண்டிருக்கிறது.
Advertisement
இதனால், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு போதிய குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். கோடை வெயிலால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீா்ப் பற்றாக்குறை நிலவி வரும் சூழ்நிலையில், குடிநீா்க் குழாய் உடைந்ததை சரிசெய்யாமல் ஊராட்சி நிா்வாகம் மெத்தனப் போக்குடன் இருப்பதாக புகாா் தெரிவிக்கின்றனா்.