முகப்பு
கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதல்: பெண் பலி

போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். இருவா் காயம் அடைந்தனா்.

Updated On : 1 மே, 2021 at 12:22 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:38 AM

போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். இருவா் காயம் அடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், அங்கம்பட்டி அருகே உள்ள கோட்டனூரைச் சோ்ந்தவா் பெரியசாமி (46), விவசாயி. இவா், இருசக்கர வாகனத்தில் சகோதரி தமிழ்ச்செல்வி (43), மற்றும் பூங்கொடி (38) ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு போத்தனூா்-ராமாபுரம் சாலையில் வியாழக்கிழமை சென்றாா்.

பள்ளத்துகொட்டாய் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த டிராக்டா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பூங்கொடி, பெரியசாமி ஆகிய இருவரும் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.