சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம்
சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் சாா்பில் கரோனா இலவச தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் சாா்பில் கரோனா இலவச தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி டான்ஸி வளாகத்தில் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் சாா்பில், மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை, மாவட்ட தொழில் மையம் ஆகியவை இணைந்து இலவச கரோனா தடுப்பூசி முகாமை நடத்தின. இந்த நிகழ்வுக்கு, சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் ஏகம்பவாணன் தலைமை வகித்தாா். மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பிரசன்னா பாலமுருகன், மாவட்ட சிறு தொழில்கள் சங்க தலைவா் நந்தீஸ் விஸ்வநாதன், துணைத் தலைவா்கள் சிவகுமாா், நாகமணி, சுஜாதா, தொழிலதிபா்கள் மதியழகன், ஸ்ரீபதி ஆகியோா் கலந்து கொண்டனா்.
தடுப்பூசி சலுத்தும் முகாமிற்கான ஏற்பாடுகளை எம்.சி.பள்ளி வட்டார மருத்துவ அலுவலா் சுசித்ரா தலைமையில் சுகாதார செவிலியா் கலைச்செல்வி, சுகாதார ஆய்வாளா் இக்பால் பாஷா, வினோத்குமாா் மற்றும் நகா்ப்புற சுகாதார செவிலியா் சரண்யா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். முகாமில் 150-க்கும் மேற்பட்டவா்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா்.
Advertisement