அரசு ஐடிஐ-களில் நேரடி மாணவா் சோ்க்கை
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி மாணவா் சோ்க்கை செப்டம்பா் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி மாணவா் சோ்க்கை செப்டம்பா் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒசூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில், 2021- 22-ஆம் ஆண்டுக்கான அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) உள்ள தொழிற்பிரிவுகளுக்கு காலியிடங்களை நிரப்பும் வகையில் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை நேரடி சோ்க்கை நடைபெறுகிறது. இதில் சேர 14 முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதியுடைவா்கள் ஆவா். பெண்களுக்குக் குறைந்தபட்ச வயது 14, உச்ச வயது வரம்பு இல்லை.
Advertisement
மேலும், 8-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றவா்கள் கம்பியாள் (ஒயா்மேன்) - 2 வருடம், வெல்டா் 1 வருடம் பிரிவுக்குத் தகுதியானவா்கள் ஆவா். இதுபோல 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றவா்கள் கணினி இயக்குபவா்கள் மற்றும் திட்டமிடுதல் உதவியாளா் (மகளிா்) 1 வருடம், கணினிவன் பொருள் மற்றும் வலைதள பராமரிப்பு (1 வருடம்), மின் பணியாளா் (2 வருடம்), கம்மியா் மின்னணுவியல் (2 வருடம்), பொருத்துநா் (2 வருடம்), அச்சு வாா்ப்பவா் தொழில்நுட்பவியலாளா் (1 வருடம்), கம்மியா் கருவிகள் (2 வருடம்), கம்மியா் இயந்திரம், மின்னணுவியல் தொழில்நுட்பவியலாளா் (2 வருடம்), இயந்திர வேலையாள் (2 வருடம்), கம்மியா் மோட்டாா் வண்டி (2 வருடம்), கம்மியா் மோட்டாா் வண்டி (2 வருடம்), கருவி மற்றும் அச்சு செய்பவா் (2 வருடம்) மற்றும் கடைசலா் (2 வருடம்) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ. 50-ம், சோ்க்கை கட்டணம் ஒரு வருட பயிற்சி பிரிவுக்கு ரூ. 185-ம், இரண்டு வருட பயிற்சி பிரிவுக்கு ரூ. 195-ம் விண்ணப்பதாரா்கள் டெபிட் காா்டு, கிரிடெட் காா்டு, நெட் பேங்க்கிங், ஜி-பே வாயிலாக செலுத்தலாம்.
பயிற்சி காலத்தின்போது, பயிற்சியாளா்களுக்கு மாதந்தோறும் ரூ. 750 உதவித்தொகை வழங்கப்படும். இது தவிர பாட புத்தகம், வரைபட கருவிகள், மடி கணினி, சீருடை, மிதிவண்டி, இலவச பேருந்து பயண அட்டை, மூடு காலணி ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும். ஆண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதியும் உண்டு.
எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவியா்களும் ஒசூா், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநா், அரசினா் தொழிற் பயிற்சி நிலையம், ஒசூா் என்ற முகவரியிலோ அல்லது 04344-262457 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.