முகப்பு
கிருஷ்ணகிரி

ஸ்ரீவித்யா மந்திா் கல்லூரியில் கருத்தரங்கம்

ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திா் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத் துறை, பாலக்காடு தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம் ஆகியவை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
ஊத்தங்கரை வித்யா மந்திா் கல்லூரியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் பங்கேற்றோா்.
பகிர்:

ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திா் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத் துறை, பாலக்காடு தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம் ஆகியவை இணைந்து வானவில் கே.ரவியின் படைப்புலகம் என்ற தலைப்பில் இணையவழி தேசியக் கருத்தரங்கத்தை வியாழக்கிழமை நடத்தியது.

கருத்தரங்கிற்கு கல்லூரி நிறுவனா் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.பி. இராஜி, கல்லூரியின் இணைச் செயலாளா் பெ.வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரியின் முதல்வா் முனைவா் த.பாலசுப்பிரமணியன் வாழ்த்தினாா்.

பாலக்காடு தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மைய இயக்குநா் முனைவா் கு.அ.இராசா ராம் முதன்மையுரை ஆற்றினாா்.

வானவில் கே.ரவி கவிதையும் கவிதைச் சூழலும் என்ற தலைப்பில் கட்டுரையும், அணையாத சுடரேற்றுவேன் கவிதைகளில் முற்போக்குக் சிந்தனைகள் என்ற தலைப்பில் கட்டுரையும் வாசித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் முனைவா் பெ.சுரேஷ் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டாா். வானவில் கே.ரவி ஏற்புரையாற்றினாா்.

தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் முனைவா் ம.இராமச்சந்திரன் வரவேற்றாா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் கோ.அசோகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.