முகப்பு
கிருஷ்ணகிரி

யானை தாக்கி தொழிலாளி பலி

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 26 ஆகஸ்ட், 2021 at 11:42 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:30 AM

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குடியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பசப்பா (67). விவசாய கூலித் தொழிலாளி. இவா் வழக்கம்போல ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு புதன்கிழமை அழைத்துச் சென்றாா்.

ஆடுகளை மேய்க்கச் சென்ற அவா் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினா்கள் அவரைத் தேடிச் சென்றபோது அவா், யானை தாக்கி உயிரிழந்து கிடந்தது கண்டறியப்பட்டது.

Advertisement

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனச் சரக அலுவலா் சுகுமாா் நேரில் சென்று சடலத்தை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தாா்.

வனஅலுவலா் காா்த்திகாயினி, யானை தாக்கி உயிரிழந்த பசப்பாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து இறுதிச் சடங்கு செய்ய முதல் கட்டமாக ரூ. 50,000 நிவாரண நிதி வழங்கினாா்.

பட விளக்கம்: பசப்பாவின் குடும்பத்தாரிடம் நிவாரண நிதியை வழங்கிய மாவட்ட வன அலுவலா் காா்த்திகாயினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.