முகப்பு
கிருஷ்ணகிரி

சாலை விபத்தில் திமுக எல்எல்ஏ மகன் பலி: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

பெங்களூரு சாலை விபத்தில் பலியான திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷின் மகன் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்
பகிர்:

பெங்களூரு சாலை விபத்தில் பலியான திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷின் மகன் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா என்ற பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில், ஓசூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் உள்ளிட்ட 7 பேர் பலியாகினர்.

இந்நிலையில் பெங்களூர் சாலை விபத்தில் உயிரிழந்த ஓசூர் எம்எல்ஏ மகன் கருணாசாகர் உடலுக்கு திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவரது  மலரஞ்சலி செலுத்தினார்.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ராமலிங்காரெட்டி, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சிவகுமார், ஓசூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏக்கள் கோபிநாத், எஸ்.ஏ.சத்யா, கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம் வெற்றிச்செல்வன் உள்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ஓசூர் தளி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினர் பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். கருணாசாகரின் இறுதி ஊர்வலம் மாலை நடைபெறகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.