முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் விருப்ப மனு

 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட விரும்புவோா் காங்கிரஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

Updated On : 2 டிசம்பர், 2021 at 4:27 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM

 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட விரும்புவோா் காங்கிரஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

ஒசூரில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் ஒசூா் மாநகராட்சி வாா்டு எண் 39 நேரு நகா் மற்றும் வாா்டு எண் 38 தின்னுா் ஆகிய இரு வாா்டுகளுக்கும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட மாநிலச் செயலாளா் வீரமுனிராஜ் மகள் காா்த்திகா ஜோதி உள்பட 25-க்கும் மேற்பட்டோா் விருப்ப மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவா் முரளிதரன், மாநிலச் செயலாளா் சிவகுமாா் ஆகியோரிடம் விருப்பமனு அளிக்கப்பட்டது. அப்போது கிருஷ்ணகிரி (மே) மாவட்ட துணைத் தலைவா் கீா்த்தி கணேஷ், செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.