வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்
வாக்கு செலுத்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதன் மூலமே சாத்தியமாக்கிட முடியும் - உச்ச நீதிமன்றம்
புது தில்லி : வாக்காளர்களைக் கட்டாயம் வாக்கு செலுத்த வேண்டுமென பணிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
வாக்காளர்களைக் கட்டாயம் வாக்கு செலுத்த வழிமுறைகள் வகுக்கச் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. வாக்கு செலுத்தாத வாக்காளர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் கிடைக்காமல் தடுக்கப்படுவதை வழிவகை செய்ய வழிமுறைகள் வகுக்க தேர்தல் ஆணையத்தை நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று அந்த பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீது தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், மனுதாரரான அஜய் கோயல் இவ்விவகாரத்தில் சம்பந்தப்படடுள்ள அரசிடம் கோரிக்கையை எடுத்துச்செல்ல கேட்டுக்கொண்டது. இவ்விவகாரமானது அரசின் கொள்கை அடிப்படையிலானது அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
வாக்காளர்கள் கட்டாயம் வாக்கு செலுத்த வேண்டும் என்பதை விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதன் மூலமே சாத்தியமாக்கிட முடியும் என்றும் அதனைக் கட்டாயப்படுத்தி நிறைவேற்ற முடியாது என்றும் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், ஒரு குடிமகன் வாக்கு செலுத்த செல்லவில்லை என்றால் நீதிமன்றம் என்ன செய்ய முடியும்? அத்தகைய வாக்காளர்களைக் கைது செய்ய நீதிமன்றம் அறிவுறுத்த முடியுமா என்ன? என்றும் கேள்வியெழுப்பி அந்தப் பொதுநல மனுவை நிராகரித்துவிட்டது.
The Supreme Court on Thursday refused to entertain a PIL seeking directions to make voting compulsory in the country, saying such a mandate falls within the "policy domain" and cannot be issued by the judiciary.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.