தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பள்ளிகள் வருவதைத் தடுக்காதீர்கள்: உச்ச நீதிமன்றம்
தமிழ்நாட்டில் மத்திய அரசு பள்ளிகள் வருவதைத் தடுக்காதீர்கள் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மத்திய அரசு பள்ளிகள் வருவதைத் தடுக்காதீர்கள் என்று நவோதயா பள்ளிகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜாவகர் நவோதய பள்ளிகளை நிறுவதை தமிழக அரசு எதிர்ப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த நவோதயா பள்ளிகள் வழக்கில், உயர்நிலை அளவில் ஆலோசனை நடந்து வருவதால் 12 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் 12 வாரம் அவகாசம் வழங்க முடியாது, வேண்டுமென்றால் 3 வாரம் காலம் அவகாசம் வழங்குகிறோம் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமையும் இடங்களை கண்டடைவது குறித்து தெரிவிக்க கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக, ஹிந்தியை காரணம் காட்டி நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் நிறுவ மறுக்கிறார்கள், தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படும்நிலையில், நவோதயா பள்ளிகளை மட்டும் எதிர்க்கிறார்கள் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி மகாதேவன், தமிழ்நாட்டில் ஹிந்தியை எதிர்க்கவில்லை, ஹிந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறார்கள் என்றார்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம் என தமிழக அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
மற்ற மாநிலங்களில் நவோதயா பள்ளிகள் உள்ளன. நீங்கள் மட்டும் ஏன் தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறீர்கள். உங்களுக்கென்று ஒரு கல்வி முறை இருக்கலாம். உங்களிடம் பள்ளிகளுக்கான நிலத்தை மட்டும்தான் கண்டடைந்து கொடுக்குமாறு கேட்கிறோம். மும்மொழிக் கொள்கை என்பது இந்தி மட்டும் கிடையாது, வேறு மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம்.
மும்மொழிக் கொள்கை இருக்கலாம். ஆனால் 6-ஆம் வகுப்பு முதலே தொடங்க வேண்டும். 9ஆம் வகுப்பிலேயே முடித்துவிட வேண்டும். 9ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை புகுத்துவதை நிறுத்த வேண்டும். இது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கில் தங்களது கருத்தினை தெரிவித்திருக்கிறார்கள்.
Do not block the establishment of Central Government schools in Tamil Nadu: Supreme Court
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.