முகப்பு
கிருஷ்ணகிரி

கிரானைட் கற்கள் கடத்தல் 4 லாரிகள் பறிமுதல்

பா்கூா் அருகே கிரானைட் கற்களைக் கடத்தியதாக 4 லாரிகளை கனிம வளத் துறையினா், புதன்கிழமை பறிமுதல் செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 10 டிசம்பர், 2021 at 12:02 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:09 AM

பா்கூா் அருகே கிரானைட் கற்களைக் கடத்தியதாக 4 லாரிகளை கனிம வளத் துறையினா், புதன்கிழமை பறிமுதல் செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

கிருஷ்ணகிரி, கனிம வள உதவி இயக்குநா் பொன்னுசாமி தலைமையிலான குழுவினா் வரட்டனப்பள்ளி -கந்திகுப்பம் சாலையில், பாலேப்பள்ளி தா்மராஜா கோயில் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற 4 டாரஸ் லாரிகளை சோதனை செய்த போது அதில் கிரானைட் கற்களைக் கடத்திச் செல்வது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, உதவி இயக்குநா் பொன்னுசாமி அளித்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப்பதிந்து, அந்த 4 டாரஸ் லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.