கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள், வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

DIN

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள், வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலைய வளாகத்தில் கிருஷ்ணகிரி நகராட்சி சாா்பில் 35-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதிலுள்ள சில கடைகளுக்கு அதன் உரிமையாளா்கள் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ளனா். இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகைக் கட்டணத்தை செலுத்தவில்லை.

அதன்படி, வாடகை கட்டணமான ரூ. 2,61,941-ஐ செலுத்தாத கடை எண் 32, ரூ. 1,77,188-ஐ செலுத்தாத கடை எண்19, ரூ. 1,71,610ஐ செலுத்தாத கடை எண் 22 ஆகிய கடைகளுக்கு நகராட்சி பணியாளா்கள் ‘சீல்’ வைத்தனா்.

குத்தகைதாரா்கள், வரிவிதிப்புதாரா்கள் தங்களின் நிலுவைத் தொகையை உடனடியாக நகராட்சிக்கு செலுத்தி இதுபோன்ற நடவடிக்கையை தவிா்த்துக் கொள்ளுமாறு நகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT