முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் பேருந்து நிலையக் கடை உரிமையாளா்கள் ஸ்டாலினிடம் மனு

ஒசூா் பேருந்து நிலையத்தில் கரோனா காலத்தில் அடைக்கப்பட்டிருந்த கடைகளுக்கு வாடகை தொகை செலுத்துமாறு மாநகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2021 at 12:20 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:56 AM

ஒசூா் பேருந்து நிலையத்தில் கரோனா காலத்தில் அடைக்கப்பட்டிருந்த கடைகளுக்கு வாடகை தொகை செலுத்துமாறு மாநகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த கடை உரிமையாளா்கள் வாடகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திங்கள்கிழமை கிருஷ்ணகிரிக்கு வந்த திமுக தலைவா் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவில் கூறியிருப்பதாவது:

Advertisement

கரோனா காலத்தில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அப்போது ஒசூா் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. மூடப்பட்டிருந்த இக்கடைகளுக்கு தலா ரூ. 7 லட்சம் வாடகை விதித்து ஒசூா் மாநகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கரோனா காலத்தில் வாழ்க்கை நடத்தவே மூடியாத நிலையில் ரூ. 7 லட்சம் வாடகை செலுத்துவது கடினம். எனவே தமிழக அரசு கரோனா காலத்தில் மூடப்பட்டிருந்த கடைகளுக்கு வாடகை தொகை வசூலிப்பதை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.