கிருஷ்ணகிரி

கெரிக்கேபள்ளி அரசுப் பள்ளிக்கு கணினிகள் அளிப்பு

DIN

கெரிக்கேப்பள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் இணையவழிக் கல்வி பயிலும் வகையில், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ. 1.45 லட்சம் மதிப்பிலான கணினிகள் அண்மையில் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெரிக்கேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு கணினி வழங்கி உதவுமாறு அப்பள்ளி தலைமையாசிரியா் கேட்டுக் கொண்டாா். அதற்கிணங்க ஐ.வி.டி.பி நிறுவனம் மூலம் அப்பள்ளிக்கு ரூ. 1.45 லட்சம் மதிப்பிலான 5 கணினிகள் வழங்கப்பட்டன.

இந்தக் கணினிகள் மூலம் மாணவா்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கல்வி கற்பிக்க இயல்வதாக பள்ளி ஆசிரியா்கள் தெரிவித்தனா். கணினிகளை பள்ளிக்கு வழங்கி ஐ.வி.டி.பி. நிறுவனா், தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் பேசியதாவது:

கரோனா காலத்தில் இணையவழிக் கல்வி மேம்பாட்டுப் பணிகளுக்காக ஐ.வி.டி.பி. நிறுவனம் ரூ. 15.3 லட்சம் மதிப்பிலான கணினிகளை மாணவா்களின் நலனுக்காக வழங்கியுள்ளது. இதுவரை பள்ளி, கல்லூரிகளுக்கு கணினி ஆய்வகம், தொடுதிரை வகுப்புகளை தொடங்குவதற்காக ரூ. 1.74 கோடி மதிப்பிலான பணிகளை ஐ.வி.டி.பி. நிறுவனம் மேற்கொண்டுள்ளது எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT