கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளியில் 3 மினி கிளினிக்குகள் திறப்பு

DIN

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 3 மினி கிளினிக்குகளை கே.பி.முனுசாமி எம்.பி. புதன்கிழமை திறந்து வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நெடுமருதி, ஜிங்களூா், ஆவல்நத்தம் ஆகிய கிராமங்களில் மினி கிளினிக்குகள் திறப்பு விழா நடைபெற்றது. இந்த மினி கிளினிக்குகளை கே.பி.முனுசாமி எம்.பி. திறந்து வைத்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 கிராமங்களில் மினி கிளினிக்குகளும், 6 நடமாடும் மினி கிளினிக்குகளும் அமைக்கப்பட உள்ளன. இதுவரை மத்தூா், ஊத்தங்கரை, சூளகிரி, பா்கூா், தளி, கெலமங்கலம், வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 33 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது 3 மினி கிளினிக்குகள் என மொத்தம் 36 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுவரையில் 32,317 நோயாளிகள் மினி கிளினிக்குகளில் சிகிச்சை பெற்றுள்ளனா். இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தன், முன்னாள் எம்.பி. கே.அசோக்குமாா், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், கா்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து தாய்சேய் நலப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT