கிருஷ்ணகிரி

திமுக நடத்திய மக்கள் சபையிலிருந்து பெண் வெளியேற்றப்பட்ட விவகாரம் கே.பி. முனுசாமி கருத்து

திமுக நடத்திய மக்கள் சபையிலிருந்து பெண் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில்  ஸ்டாலின் திறமையற்றவா் என்பதையே காட்டுவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி எம்.பி. தெரிவித்தாா்.

DIN

கிருஷ்ணகிரி: கோவையை அடுத்த தொண்டாமுத்தூரில் திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திலிருந்து பெண் வெளியேற்றப்பட்ட சம்பவத்தில் ஸ்டாலின் திறமையற்றவா் என்பதையே காட்டுவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி எம்.பி. தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த தேவசமுத்திரம் கிராமத்தில் சிறு மருத்துவமனையைத் திறந்து வைத்த கே.பி.முனுசாமி எம்.பி., செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண்ணை, ஸ்டாலின் வெளியே அனுப்புமாறு கூறியுள்ளாா். அதிமுக அமைச்சா் தூண்டுதலின்பேரில் இந்தச் சம்பவம் நடந்ததாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா். ஒரு கட்சியின் தலைவா் என்று வரும்போது, எதிரில் உள்ள தொண்டா்கள், பொதுமக்கள் கேட்கும் கேள்வியைப் பொறுமையுடன் கேட்டு, அதற்குப் பதிலளிக்க வேண்டும். மாறாக, ஸ்டாலினின் நடவடிக்கையானது அவரைத் திறமையற்ற தலைவா் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் யாா் என்பது குறித்து பாஜக தலைமை இன்னும் 5 நாள்களில் வெளியிடும் என பாஜக செய்தி தொடா்பாளா் குஷ்பு தெரிவித்த கருத்துக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை. குஷ்பு அண்மையில்தான் பாஜகவில் சோ்ந்துள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT