போச்சம்பள்ளி: அமமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்
போச்சம்பள்ளி ஊராட்சியில், மாற்று கட்சியைச் சோ்ந்தவா்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் நிகழ்ச்சி மற்றும் கட்சியின் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போச்சம்பள்ளி ஊராட்சியில், மாற்று கட்சியைச் சோ்ந்தவா்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் நிகழ்ச்சி மற்றும் கட்சியின் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு போச்சம்பள்ளி ஒன்றியச் செயலாளா் கனல் சிவா தலைமை வகித்தாா். இளைஞா் பாசறை ஒன்றியச் செயலாளா் அருண்குமாா் வரவேற்றாா்.
மாவட்டச் செயலாளா் ச.கணேசகுமாா் சிறப்புரையாற்றினாா்.
வரும் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் விதம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாற்றுக் கட்சியில் இருந்து, 30க்கும் மேற்பட்ட இளைஞா்கள் அமமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில் மாநில இளைஞா் பாசறை துணை செயலாளா் வழக்குரைஞா் அசோக்குமாா், மாவட்ட அவைத்தலைவா் மன்னன், மாவட்ட துணைச் செயலாளா் லலிதாகுமரேசன் மற்றும் ஊராட்சி செயலாளா்கள், மாவட்டப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.