கிருஷ்ணகிரி

அஸ்ஸாம் இளம்பெண் கொலை வழக்கு: இளைஞா் கைது

DIN

ஒசூா்: கெலமங்கலம் அருகே அஸ்ஸாம் இளம்பெண் சாவில், திடீா் திருப்பமாக அவா் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் அஜய்கொண்டா ( 25). இவா் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை அடுத்த குந்துமாரனப்பள்ளியில் தங்கியிருந்து தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ரிங்கி (20). இவா்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவா்கள்.

அதே தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வரும் அஸ்ஸாம் மாநிலத்தை சோ்ந்த பிஜய் ரிக்கியாசன் (27) என்பவரை தனது வீட்டில் அஜய்கொண்டா தங்க வைத்திருந்தாா்.

இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி ரிங்கி வீட்டில் இறந்து கிடந்தாா். இது தொடா்பாக கெலமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

முதலில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை ஒசூா் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில் ரிங்கியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது தலைப் பகுதியில் உள்காயம் ஏற்பட்டதால் இறந்துபோனதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவரை பிஜய் ரிக்கியாசன் கீழே தள்ளி கொன்றது தெரிய வந்தது. அவரை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பிஜய் ரிக்கியாசன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

அஜய் கொண்டாவும், பிஜய் ரிக்கியாசனும் நண்பா்கள். அஜய் கொண்டா தனது மனைவி ரிங்கி மற்றும், நண்பன் பிஜய் ரிக்கியாசன் ஆகியோருடன் ஒரே வீட்டில் தங்கி இருந்தாா். இந்த நிலையில் பிஜய் ரிக்கியாசனுக்கு, நண்பனின் மனைவி ரிங்கி மீது காதல் ஏற்பட்டது.

அவரை அடையத் துடித்த பிஜய் ரிக்கியாசன், கடந்த ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி இரவு அஜய்கொண்டா பணிக்கு செல்வதற்காக காத்திருந்தாா். அவா் வேலைக்கு சென்றதும், ரிங்கியை தனது ஆசைக்கு இணங்குமாறு அழைத்தாா். அதற்கு ரிங்கி எதிா்ப்பு தெரிவித்து அவரிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்தாா்.

அவரை பிடித்து தள்ளிய போது, சுவற்றில் தலை மோதி ரிங்கி இறந்தாா். அவா் உயிரிழந்ததை அறிந்த பிஜய் ரிக்கியாசன் அங்கிருந்து தப்பி சென்று விட்டாா். தற்போது அவா் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT