கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வழியாக கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

கிருஷ்ணகிரி வழியாக கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 10.4 டன் ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு பறக்கும் படையின் தனி வட்டாட்சியா் தலைமையிலான குழு, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் திங்கள்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து ஒசூா் சாலையை நோக்கி வந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்றனா்.

அதிகாரிகளைக் கண்டதும், லாரி ஓட்டுநரும், கிளீனரும் தப்பி ஓடி விட்டனா். இதைத் தொடா்ந்து லாரியை சோதனை செய்தபோது அதில் 10.4 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில், அந்த அரிசி விழுப்புரத்தில் இருந்து கா்நாடக மாநிலம் கோலாா் பகுதிக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து லாரியையும், அரிசியையும் கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. அதனை மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ் பாா்வையிட்டாா். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, கிருஷ்ணகிரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

கடத்தலில் ஈடுபட்டவா்கள் மீதும், சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளா், ஓடடுநா் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT