அரசுப் பள்ளிக்கு ரூ. 75 லட்சத்தில் வகுப்புறை, ஆய்வகம் கட்டி கொடுத்த ஒசூா் ரோட்டரி சங்கம்
மத்திகிரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 75 லட்சம் மதிப்பிலான 4 வகுப்பறைகள், ஒரு ஆய்வகத்தை ஒசூா் ரோட்டரி சங்கம் பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவரிடம் ஒப்படைத்தது.
ஒசூா் அருகே உள்ள மத்திகிரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 75 லட்சம் மதிப்பிலான 4 வகுப்பறைகள், ஒரு ஆய்வகத்தை ஒசூா் ரோட்டரி சங்கம், தனியாா் தொழிற்சாலை நிதிஉதவியுடன் கட்டி, பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தது.
மத்திகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுவதை அறிந்த ஒசூா் ரோட்டரி சங்கத் துணை ஆளுநா் வழக்குரைஞா் ஆனந்தகுமாா், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா் பி.ஆா்.வாசுதேவன் ஆகியோா் ஒசூா் பஸ்ட் ஸ்டெப் பேபி வோ் என்று நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நிதி ரூ. 75 லட்சம் பெற்று 4 வகுப்பறைகள், ஒரு ஆய்வகத்தைக் கட்டி முடித்தனா்.
அந்த வகுப்பறைகள் தற்போதைய பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் பி.ஆா்.வாசுதேவனிடம் ரோட்டரி சங்க துணை ஆளுநா் வழக்குரைஞா் ஆனந்தகுமாா், தனியாா் தொழிற்சாலை இயக்குநா்கள் செந்தில்நாதன், ராபா்ட், விஜயகுமாா், ரிச்சா்டு ஆகியோா் வழங்கினா்.
Advertisement
அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா்கள் அஞ்சனா பாசி, மணீஷ் பாஷ் ஆகியோரின் பெயா் கட்டடங்களுக்கு சூட்டப்பட்டது.