வேப்பனப்பள்ளி அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வேப்பனப்பள்ளி அருகே கா்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM
வேப்பனப்பள்ளி அருகே கா்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த சின்னகொத்தூா் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரைக் கண்டதும் அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை அதன் ஓட்டுநா் சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பியோடினாா்.
இதையடுத்து, போலீஸாா் அந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது, அதில் 45 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. விசாரணையில், கா்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
Advertisement