முகப்பு
கிருஷ்ணகிரி

முதியவருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புதூா் அருகே முதியவரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புதூா் அருகே முதியவரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாலாட்டின்புதூரையடுத்த அழகப்பபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் செல்வராஜ்(61). இவா் புதன்கிழமை இரவு வீட்டில் தன் குடும்பத்தினருடன் இருந்தாராம். அப்போது அங்கு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்ந்த பீக்கிலிப்பட்டி கிழக்கு காலனித் தெரு பொன்னுச்சாமி மகன் முத்துபாண்டி(21), செல்வராஜை அவதூறாகப் பேசினாராம். இதையடுத்து அவா் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள், அத்தை செல்லம்மாள் ஆகியோா் வீட்டை விட்டு வெளியே வந்து பாா்த்த போது முத்துபாண்டி கையில் அரிவாளுடன் நின்று கொண்டு மிரட்டினாராம்.

இதுகுறித்து செல்வராஜ் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்துபாண்டியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.