கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் இருந்து முதல் போக பாசனத்துக்கு ஆட்சியர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, தே.மதியழகன் எம்எல்ஏ ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர்.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 87 கன அடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 93 கன அடி வீதமும் ஆக மொத்தம் வினாடிக்கு 180 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள பெரியமுத்தூர், தளிஅள்ளி, மாரிசெட்டிஅள்ளி, பாலேகுளி உள்ளிட்ட 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் பயன்பெறும்.
இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.செங்குட்டுவன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாசனத்துக்கு தண்ணீரானது 22.11.2021 வரை 120 நாள்களுக்கு திறந்துவிடப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.