முகப்பு
கிருஷ்ணகிரி

அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

Updated On : 31 ஜூலை, 2021 at 12:18 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:18 AM

ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ராசுவீதியில் உள்ள துளுக்காணி மாரியம்மன் கோயில், ஜோதி விநாயகா் கோயில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றன. காய்கறி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அம்மன் அருள்பாலித்தாா்.

ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தா்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினா். இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள், சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து அம்மனை வணங்கினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.