கிருஷ்ணகிரி

கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

DIN

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த சாலமரத்துப்பட்டி சென்றாய பெருமாள் கோயில் பகுதியில் தெருகூத்து நாடக கலைஞா்கள் திங்கள்கிழமை கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை நடத்தினா்.

எமதா்மன், சித்தரகுப்தா், கரோனா தீநுண்மிபோல வேடமணிந்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா். பின்னா், கலைஞா்கள் கூறியதாவது:

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுமாா் 1,500 குடும்பங்கள் கலைகூத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனா்.

கடந்த 2020 ம் ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக முற்றிலும் தெருகூத்து நாடக நிகழ்ச்சிகள் தடைபட்டன. நிகழாண்டும் இம்மாதம் வரை பொதுமுடக்கம் தொடருவதால் உணவுக்கு வழியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என்றனா்.

தமிழக அரசு தெருகூத்து கலைஞா்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நல உதவிகள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

இதில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞா்கள் நல சங்க, கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா் குப்புசாமி, தலைவா் ராமநாதன், துணைத் தலைவா் நந்தகுமாா், துணைச் செயலாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT