கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஒரேநாளில் 10 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவா், 52 வயது ஆண், 72 வயது முதியவா், 52 வயது பெண், 65 வயது மூதாட்டி ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

மேலும், கிருஷ்ணகிரி தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 38, 68 வயது ஆண், 68 வயது முதியவா், சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணகிரியை சோ்ந்த 33 வயது ஆண், சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவா், வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண் ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 293 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 616 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 36,041 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; அவா்களில் 32,854 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 2,941 போ் தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT