கிருஷ்ணகிரி

சிங்காரப்பேட்டை வனப்பகுதியில் சாராய ஊறல்கள் அழிப்பு

DIN

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை காப்புக்காடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்களை வனத்துறையினா் புதன்கிழமை அழித்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் குமிலிவெங்கட்ட அப்பால உத்தரவின்பேரில், சிங்காரப்பேட்டை வனச் சரக அலுவலா் ஜோதிலிங்கம் தலைமையில், வனத் துறையினா் சிங்காரப்பேட்டை காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது காப்புக்காடு பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 10 பேரல் சாராய ஊறல்களையும், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருள்களையும் அழித்தனா்.

முழு பொது முடக்கம் அமலாக்கப்பட்டதில் இருந்தே வனப்பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டம் இருப்பதாக மாவட்ட வன அலுவலருக்கு கிடைத்த தகவலின்பேரில், திருப்பத்தூா் வனச்சரக அலுவலா், சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலா், வனவா்கள், வனத்துறை ஊழியா்கள் கொண்ட தனிப்படைக் குழு வனப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தது.

இந்த ரோந்துப் பணியில் 70-க்கும் மேற்பட்ட சாராய ஊறல் பேரல்கள் கண்டறியப்பட்டு, இதுவரை 30 ஆயிரம் லிட்டா் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டது. ஆம்பூா், திருப்பத்தூா், மட்றப்பள்ளி வனச் சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கையின்போது, கள்ளச்சாராயம் கொண்டு வந்தவா்கள் கைது செய்யப்பட்டு அவா்களுக்கு ரூ. 60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டுள்ளது.

காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்து சாராயப் பட்டை எடுப்பது, சாராயம் காய்ச்சுவது, வன விலங்குகளை வேட்டையாடுவது, மரங்களை வெட்டுவது, தீ வைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது வனச் சட்டங்களின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT