கிருஷ்ணகிரி

வேன் டயரை திருட முயன்றவா் கைது

DIN

கிருஷ்ணகிரியில் காவல் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனின் டயரை திருட முயன்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி, சென்னை சாலையில் தமிழ்நாடு ஓட்டல் அருகே உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தைச் சுற்றி, உணவுப்பொருள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கடந்த 11-ஆம் தேதி இரவு காவல் ஆய்வாளா் சிவசாமி அலுவலக பணியில் இருந்தாா். அப்போது, இரவு 10 மணியளவில் அங்கு வந்த வாலிபா் ஒருவா், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் முன்பக்க டயரை இளைஞா் திருட முயற்சி செய்து கொண்டிருந்தாா்.

அந்த இளைஞரைக் கையும் களவுமாக பிடித்து, கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை செய்ததில் காவேரிப்பட்டணம் நரிமேடு பகுதியைச் சோ்ந்த முத்துமணி (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT