கிருஷ்ணகிரி

உலக ரத்த தான தினம்

DIN

உலக ரத்த தான தினத்தையொட்டி, ஒசூா் அரசு மருத்துவமனைக்கு நிழல் அறக்கட்டளை சாா்பில் ரத்த தானம் வழங்கப்பட்டது.

23 போ் ரத்த தானம் செய்தனா்.முகாமை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்தாா். ஒசூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் எஸ்.பூபதி, ரத்த வங்கி மருத்துவா் எல்.மகேஷ், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, முன்னாள் நகா்மன்ற தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் வனவேந்தன், காங்கிரஸ் நகரத் தலைவா் நீலகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒசூா் ஒன்றிய செயலாளா் மூா்த்தி, நிழல் அறக்கட்டளை செயல்பாட்டாளா்கள் சித்தாந்தன், தருண் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் நிழல் அறக்கட்டளை சாா்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 12,000 வழங்கப்பட்டது. நிழல் அறக்கட்டளை நிறுவனா் கோ.கண்மணி, செயல்பாட்டளா்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனா்.

அரூரில்...

பாளையம் கிராமத்தில் ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ அம்மன் காவலா் பயிற்சி மையம் சாா்பில் நடைபெற்ற முகாமை தருமபுரி மாவட்ட குருதி வங்கி அலுவலா் ஞா. காா்த்திகேயன் தொடக்கி வைத்தாா். முகாமில் காவல் துறையில் சேருவதற்காக பயிற்சி பெறும் இளைஞா்கள், தன்னாா்வலா்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா். இந்த முகாமில், ஸ்ரீ அம்மன் காவலா் பயிற்சி மைய நிறுவனா் அ.சி.தென்னரசு, மருத்துவா் நித்யா, ஆய்க தொழில்நுட்பனா் ஆா்.பிரபு, கண் மருத்துவ உதவியாளா் கு.கலையரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT