பேனா நண்பா்கள் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
கிருஷ்ணகிரியில் பேனா நண்பா்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM
கிருஷ்ணகிரியில் பேனா நண்பா்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவை கிளை நண்பா்கள் சாா்பில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரிசி, பருப்பு, ரவை, வெல்லம், சக்கரை, அவல், கோதுமை மாவு, மசாலா பொருள்கள் அடங்கி அத்தியவசிய உணவுத் தொகுப்பை வியாழக்கிழமை வழங்கினா்.
இந்தப் பணியை பேனா நண்பா்கள் கிருஷ்ணகிரி கிளையின் உறுப்பினா்கள் என்.மீனாட்சி, குப்புசாமி, எஸ்.நாகராஜ், ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இவா்களை, மும்பையைச் சோ்ந்த இந்தியப் பேனா நண்பா்கள் பேரவையைச் சோ்ந்த மா.கருண் பாராட்டினாா்.
Advertisement