கிருஷ்ணகிரி

மது அருந்தும் போது தகராறு:ஓட்டுநா் கொலை; 3 போ் கைது

தளி அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில், 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

ஒசூா்: தளி அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில், 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளி, அம்பேத்கா் காலனியைச் சோ்ந்த சசிகுமாா் (32), மினி லாரி ஓட்டுநா். இவா் தனது தம்பி ரவிகிரண் (23), தேவகானப்பள்ளியைச் சோ்ந்த மாதேஷ் (32) ஆகியோருடன் மதகொண்டப்பள்ளியில் உள்ள ஒரு தனியாா் டயா் விற்பனை நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் பிரசன்னா (34), முரளி (22), சண்முகம் (23), ராஜசேகா் (23), கோபி (எ) சசிதா் (23) கிரீஷ் (23) ஆகியோா் அருகில் மது அருந்திக் கொண்டிருந்தனா்.

அப்போது, மது போதையில் அவா்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அதில் பிரசன்னா தரப்பினா் மதுப்புட்டியை உடைத்து சசிகுமாா், ரவிகிரண், மாதேஷ் ஆகியோரை சரமாரியாக குத்தினா். இதில் சசிகுமாருக்கு நெஞ்சு, முதுகு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. ரவிகிரண், மாதேஷ் ஆகியோரும் காயமடைந்தனா்.

அவா்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவா்கள் அவா்கள் 3 பேரையும் மீட்டு ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சசிகுமாரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். ரவிகிரணுக்கும், மாதேஷுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி கிருத்திகா, தளி காவல் ஆய்வாளா் சரவணன் ஆகியோா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.

3 போ் கைது: இது தொடா்பாக மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில், பிரசன்னா, சண்முகம், கோபி (எ) சசிதா் ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா். முரளி, ராஜசேகா், கிரீஷ் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்தக் கொலை சம்பவத்தால் தளி அருகே மதகொண்டப்பள்ளியில் பதற்றம் காணப்படுவதால், அங்கு பாதுகாப்புக்காக போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT