முகப்பு
கிருஷ்ணகிரி

பென்னாகரம்: ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

ஏரியூர் அருகே வனப்பகுதியில் இருந்து உணவு தேடி கிராமப்பகுதிகளில் இந்த ஒற்றை யானையை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்த பென்னாகரம் வனத்துறையினர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:51 PM
பகிர்:

ஏரியூர் அருகே வனப்பகுதியில் இருந்து உணவு தேடி கிராமப்பகுதிகளில் இந்த ஒற்றை யானையை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்த பென்னாகரம் வனத்துறையினர். 
பெண்ணாகரம் வனப் பகுதிக்கு உட்பட்ட பதனவாடி காப்புக்காடு பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளனர். இடப்பெயர்ச்சி அடைந்த யானைக் கூட்டங்கள் வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றி திரிகின்றனர். 
தற்போது பெண்ணாகரம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் உணவு தேடி பதனவாடி காப்புக்காடு வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை நெருப்பூர் காந்திநகர் குடியிருப்புப் பகுதி பகுதிகளிலும் அருகில் உள்ள வயல் வெளிகளிலும் சுற்றித் திரிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் பெண்ணாகரம் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். 
தகவலின்பேரில் பெண்ணாகரம் வனச்சரக அலுவலர் முருகன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் கிராம பகுதிக்குள் நுழைந்த யானையை பண்ணவாடி, ஒட்டனூர் உள்ளிட்ட பகுதிகளின் வழியே காவிரி ஆற்றில் நீந்தியபடி  3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீண்டும் பதனவாடி காப்புக்காடு பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர். 
தற்போது வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட யானையானது முத்தையன் கோவில் வனப் பகுதிக்கு அருகே உள்ள தடுப்பணை பகுதியில் சுற்றித் திரிவதாகவும், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் எனவும், ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாக பெண்ணாகரம் வனச்சரக அலுவலர் தெரிவித்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →