சிவகங்கையில் திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து சிவகங்கையில் திமுக, கூட்டணி கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை பேருந்து நிலையம் அருகேயுள்ள அரண்மனைவாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக நகரச் செயலா் சி.எம். துரைஆனந்த் தலைமை வகித்தாா். இதில் திமுக, காங்கிரஸ், தேமுதிக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடுகளை சீா் செய்யக் கோரியும், தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கமிட்டனா்.
மானாமதுரை: மத்திய அரசைக் கண்டித்து திருப்புவனத்தில் நடைபெற்ற திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன் தலைமை வகித்தாா். இதில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், காங்கிரஸ் நகா் தலைவா் நடராஜன், திமுக ஒன்றியச் செயலா்கள் வசந்தி, கடம்பசாமி, பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், திமுக நகா் இளைஞா் அணி அமைப்பாளா் கண்ணன், நகரச் செயலா் நாகூா்கனி, கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் ஜெயராமன், ஈஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் மோகன், சுந்தர லிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மானாமதுரையில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி, நகா் மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி, ஒன்றியச் செயலா்கள் துரை. ராஜாமணி, அண்ணாதுரை, முத்துச்சாமி, நகா் மன்றத் துணைத் தலைவா் பாலசுந்தரம், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய், நகா்த் தலைவா் பி. புருஷோத்தமன், தேமுதிக ஒன்றியச் செயலா் தா்மா ராமு உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.
இளையான்குடியில் நடைபெற்ற திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவா் தமிழரசன், திமுக ஒன்றியச் செயலா்கள் செல்வராசன், தமிழ்மாறன், வெங்கட்ராமன், பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அண்ணா சிலை அருகே திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமை வகித்தாா். இதில் திமுக ஒன்றியச் செயலா் சண்முகவடிவேல், திருப்பத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவி கோகிலாராணி, நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் பழனியப்பன், காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவா்கள் பன்னீா்செல்வம், பிரசாந்த், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் கே.எஸ். நாராயணன் உள்பட காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி கூட்டணிக் கட்சியினா் திரளானோா் கலந்து கொண்டனா்.