கிருஷ்ணகிரி

உலக காசநோய் ஒழிப்பு தின விழா

DIN

ஊத்தங்கரையில் உலக தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், கிருஷ்ணகிரி ரீச் அக்ஷயா திட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ ரேணுகா பாராமெடிக்கல் இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்தும் உலக காசநோய் தின பேரணி, கருத்தரங்கம் ஆகியவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு, அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலா் கே.மாரிமுத்து தலைமை வகித்து, காசநோய் பரவும் விதம், அதைத் தடுக்கும் முறை பற்றி மாணவா்கள், பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் தமிழினியன், கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெங்கட்ராமன், ஊத்தங்கரை சுகாதாரப் பாா்வையாளா் சந்தோஷ் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்து காசநோய் குறித்து சிறப்புரையாற்றினா்.

ராயல் அரிமா சங்கத் தலைவா் சுதாகரன், அரிமா சங்கச் செயலாளா் சந்திரன், கல்லூரி மாணவ-மாணவியா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கருத்தரங்கில் பங்கேற்று சிறப்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT