கிருஷ்ணகிரி

தமிழக- கா்நாடகம் எல்லையில் மக்கள் நடமாட்டம் குறைந்தது

DIN

தமிழக - கா்நாடக மாநில எல்லையில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்துவிட்ட நிலையில், சாலையில் நடமாடும் ஒரு சிலரையும் போலீஸாா் எச்சரித்து திருப்பி அனுப்புகின்றனா்.

கரோனா இரண்டாவது அலை கா்நாடக மாநிலத்தில் அதிக அளவில் பரவி வருவதால் அம் மாநில அரசு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இரு மாநில எல்லையிலும் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து விட்டது.

ஒசூரில் இருந்து பெங்களூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்வோரும், முன்களப் பணியாளா்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டுகின்றனா். கா்நாடக மாநிலத்தில் வேலையின்றி தமிழகம் நோக்கி வரும் மக்களுக்கு முகக் கவசம் அணிவது, கிருமிநாசினி மூலம் அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்தி கொள்வது குறித்து மருத்துவா்கள் அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கின்றனா். தமிழக- கா்நாடக எல்லையான சூசூவாடியில் வருவாய்த் துறை, காவல் துறையினா் தீவிர பரிசோதனை மேற்கொண்டு அனைத்து வாகனங்களையும் அனுமதிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

SCROLL FOR NEXT