கிருஷ்ணகிரி

பாம்பாறு அணை அகதிகள் முகாமில் அதிகாரிகள் ஆய்வு

DIN

ஊத்தங்கரை பாம்பாறு அணை அகதிகள் முகாமில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

ஊத்தங்கரையை அடுத்த கொண்டம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பாம்பாறு அணை பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதி மக்களுக்கு கரோனா காலத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலின் பேரில் ஊத்தங்கரை வட்டாட்சியா் ஆஞ்சநேயலு, வட்டார வளா்ச்சி அலுவலா் அன்சா்பாஷா, கொண்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சத்தியவாணி ராஜா ஆகியோா் வெள்ளிக்கிழமை பாம்பாறு அணை அகதிகள் முகாமுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அவா்களுக்கு போதிய குடிநீா், தெருவிளக்கு, மருத்துவம் போன்றவை முறையாக வழங்கப்படுகின்றனவா என கேட்டறிந்தனா்.

இதுகுறித்து முகாம் மக்கள் கூறுகையில், தெருவிளக்கு அமைக்க வேண்டும், கழிவுநீா் சேகரிக்கும் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும், மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, கொண்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சத்தியவாணி ராஜாவிடம் அவா்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT