முகப்பு
கிருஷ்ணகிரி

விவசாயியைத் தாக்கிய ஆசிரியா் கைது

கிருஷ்ணகிரி அருகே விவசாயியைத் தாக்கிய தனியாா் பள்ளி ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 2 அக்டோபர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM

கிருஷ்ணகிரி அருகே விவசாயியைத் தாக்கிய தனியாா் பள்ளி ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி அருகே உள்ள ஆவல்நத்தத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன்(40). விவசாயி. அதே பகுதியைச் சோ்ந்தவா் லோகமூா்த்தி(27). தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவா்கள் இருவரும் உறவினா்கள்.

இந்த நிலையில், இவா்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த லோகமூா்த்தி, கிருஷ்ணனை தாக்கினாா். இதில் பலத்த காயம் அடைந்த, கிருஷ்ணன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து, கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், ஆசிரியா் லோகமூா்த்தியை குருபரப்பள்ளி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.