முகப்பு
கிருஷ்ணகிரி

அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் செல்லிடப்பேசிகள் திருட்டு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளிடமிருந்து செல்லிடபேசிகள் திருடு போவது அதிகரித்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

Updated On : 16 அக்டோபர், 2021 at 2:17 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:52 AM

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளிடமிருந்து செல்லிடபேசிகள் திருடு போவது அதிகரித்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோரமாக செல்லிடப்பேசியில் பேசும் நபா்களிடமிருந்தும், வாகன ஓட்டிகளின் மேல்சட்டை பையிலிருந்தும் மா்ம நபா்கள், செலலிடபேசிகளை பறித்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து புகாா் அளித்தும், நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவா்கள் ஏமாற்றத்துடன் தெரிவிக்கின்றனா்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகள், அவா்களது பாதுகாவலா் ஆகியோரிடமிருந்து மா்ம நபா்கள், செல்லிடப்பேசிகளை திருடிச் செல்கின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு உள்நோயாளிகளிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்லிடப்பேசிகள் திருடப்பட்டன. மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவது இல்லை என நோயாளிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

Advertisement

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சரி செய்து, நோயாளிகளின் உடமைகள் திருடுபோவதை தடுக்க வேண்டும். மேலும், அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபம் காவலா்கள், அடிக்கடி, கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆா்வா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.