கிருஷ்ணகிரி

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்களுக்கு வைப்பு நிதியை வழங்கக் கோரிக்கை

DIN

ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்களுக்கான வைப்புநிதியை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்தில் சத்துணவுப் பணியாளா்களாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களுக்கு வழங்க வேண்டிய ஜிபிஎப் வைப்பு நிதியை, பணியில் இருந்து ஓய்வுபெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் வழங்கப்படாமல் இழுத்தடித்து வருவதாக ஓய்வுபெற்ற பணியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து பலமுறை நேரில் சென்று கூறியும், மனுக்களை கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சென்று கேட்டபோது, சென்னை ஜிபிஎப் அலுவலகத்துக்கு அனுப்பி விட்டோம் என கூறி வருகின்றனா்.

சத்துணவுப் பணியாளா்கள் ஓய்வுபெற்ற நிலையில், கரோனா காலத்தில் அவா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்களுக்கு, உடனடியாக ஜிபிஎப் தொகையை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT